இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா, இலங்கை, வங்க தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி இன்று வங்கதேச அணியை சந்தித்தது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி வங்க தேச அணிக்கு துவக்க வீரர்களாக தமிம் இக்பால், சவுமியா சர்கார் களம் இறங்கினார்கள்.
சவுமியா சர்கார் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார், தமிம் இக்பால் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் (18), மெஹ்முதுல்லா (1) ஆகியோரை விஜய் சங்கர் வெளியேற்றினார். லித்தோன் தாஸ் 34 ஓட்டங்கள் எடுத்து சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார்.
சபிர் ரஹ்மான் தாக்குப்பிடித்து விளையாடி 30 ஓட்டங்கள் அடிக்க வங்காள தேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் மோசமான பீல்டிங்கை பார்க்க முடிந்தது. தமிம் இக்பாலுக்கு 1கேட்ச், லிடோன் தாஸுக்கு 2கேட்சுகள், சபிர் ரகுமானுக்கு 1கேட்ச் என மொத்தம் 4 கேட்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர்
இதைத் தொடர்ந்து 140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகார் தவான் களமிறங்கினர்.
ரோகித் சர்மா 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த ரிசப் பாண்டும் 7 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தன.
இருப்பினும் துவக்க வீரரான தாவன், ரெய்னாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அணியின் எண்ணிக்கை 108-ஆம் இருந்த போது ரெய்னா 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
43 பந்துக்கு 55 பந்துகள் அடித்து அரைசதம் அடித்த தவான் டஸ்கின் அகமத் பந்து வீச்சில் வெளியேற, இறுதியாக மணீஷ் பாண்டே அதிரடி காட்ட, இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முத்தரப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.