Sunday, August 14, 2016

How Lanka

பலூன் மூலம் தனியாக உலகை சுற்றி வரும் மனிதர்

ரஷ்­யாவைச் சேர்ந்த ஒருவர் பலூன் மூலம் தனி­யாக உலகை சுற்­றி­வரும் பய­ணத்தை மேற்கொண்டுள்ளார். 65 வய­தான பெடோர் கொனி­யுகோவ் எனும் இவர், இப் ­ப­ய­ணத்­தின்­போது உறை­ய­வைக் கும் குளிர், உறக்­க­மின்மை போன்ற நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ளார்.

அவரின் ஒட்­சிசன் முக ­மூ­டி­மீது ஐஸ் படியும் அள­வுக்கு குளி­ரான சூழலில் இவர் பய­ணத்தை மேற்கொள்கிறார். எனினும், உலகை சுற்­றி­வரும் பய­ணத்தில் அரைப்­ப­கு­தியை பெடோர் கொனியுகோவ் கடந்துள்ளார் என அவரின் மகன் ஒஸ்கார் கொனி­யுகோவ் நேற்று புதன்­கி­ழமை தெரி­வித்­துள்ளார்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் வட பகு­தி­யி­லி­ருந்து கடந்த 12 ஆம் திகதி இப் ­ப­யணத்தை பெடோர் கொனி­யுகோவ் ஆரம்­பித்தார். 56 மீற்றர் (118 அடி) உய­ர­மான இந்த பலூன் ஹீலியம் மற்றும் வெப்­ப­வாயு மூலம் இயங்­கு­கி­றது. இந்த பலூனில் தொங்கும் 2 மீற்றர் (6 அடி, 7 அங்­குலம்) நீளமும் 2 மீற்றர் உய­ரமும் 1.8 மீற்றர் (5 அடி 11 அங்­குலம்) அக­லமும் கொண்ட கார்பன் பெட்டியொன்றில் பெடோர் கொனி­யுகோவ் தங்­கி­யுள்ளார்.


இப்­ப­யணம் ஆரம்­ப­மாகி 12 தினங்­களில், அதா­வது எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை அவர் மீண்டும் அவுஸ்­தி­ரே­லி­யாவை வந்­த­டைவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

திட்­ட­மிட்­ட­படி இப்­ப­யணம் நிறை­வ­டைந்தால் ஒரு புதிய சாத­னை­யாக அமையும். அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட் 2002 ஆம் ஆண்டு 13 நாட்களில் பலூன் மூலம் உலகை சுற்றி வந்தமையே தற்போதைய சாதனையாகும்.