இன்று இணைய வலையமைப்புக்கள் இல்லை என்றால் அணுவும் இயங்காது என்ற நிலைதான் எங்கும் காணப்படுகின்றது. இவ் இணையத் தொழில்நுட்பத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கு என்றுமே தனி வரவேற்பு காணப்படுகின்றது. இந்த வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுவது Wi-Fi ஆகும். இதன் வேகம் அதிகமாக இருப்பதுடன் ஏனைய வயர்லெஸ் இணைய தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட தூரம் பயன்தரக்கூடியதாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும். இப்படியிருக்கையில் தற்போது உள்ள Wi-Fi தொழில்நுட்பத்தின் வேகத்தினை விடவும் 3 மடங்கு வேகத்தில் தரவுகளை பரிமாற்றம் செய்யக்கூடிய புதிய Wi-Fi தொழில்நுட்பத்தினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அது மட்டுமன்றி MegaMIMO 2.0 என அழைக்கப்படும் இப்புதிய முறையானது, தற்போதைய தொழில்நுட்பத்தினை விடவும் இரண்டு மடங்கு தூரத்திற்கு தரவுப் பரிமாற்றம் செய்ய வல்லது. இதனை MIT's Computer Science மற்றும் Artificial Intelligence Lab (CSAIL) ஆகிய நிறுவனங்கள் இணைத்து உருவாக்கியுள்ளது. இத்தொழில்நுட்பம் விரைவில் பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.