5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 170 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைக் கடந்து சித்திபெற்றுள்ளனர். யாழ்.மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 152 புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில், 254 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அவர்களில் 170 பேர் வெட்டுப் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தனர்.
யாழ்ப்பாணம் யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலையில் 284 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அவர்களில் 140 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைக் கடந்து சித்திபெற்றனர். யாழ்.மாவட்டத்தில், யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை மாணவி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.