வேண்டும் என்று சேதப்படுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நாணயத்தாள்களை பெற்றுக்கொள்வதை தவிர்க்குமாறும் அப்படி பெற்றுக்கொள்ளும் நாணயத்தாள்களின் பெறுமதியை நஷ்டமாக எதிர்நோக்க நேரிடும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதனால், கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது இப்படியான சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை பெற்றுக்கொள்ளாது மறுக்க வேண்டும் எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
சேதப்படுத்தப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட நாணயத்தாள்களை மத்திய வங்கி மாற்றிக்கொடுக்காது.
இது குறித்து மக்களுக்கு அறிவுறுத்த விளம்பரங்களை வெளியிட மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் தேசிய செல்வத்தை சேமிப்பதற்காக நாணயத்தாள்களை கவனமாகவும் சுத்தமாகவும் பயன்படுத்துமாறு மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.