Friday, October 14, 2016

How Lanka

ரணில் விடாப்பிடி தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல.....

ரணில் விடாப்பிடி தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ரணில் அறிவுறுத்தல்!


பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை முன்னெடுத்து வந்த விசாரணைகளை வழமை போல் முன்னெடுத்துச் செல்லுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிமோசடி விசாரணைப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் மற்றும் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில், “நீங்கள் இதுவரை முன்னெடுத்து வந்த விசாரணைகள், பரிசோதனைகளை அதே விதத்தில் முன்னெடுத்துச் செல்லுங்கள்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அரச நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றனவா?, என்கிற சந்தேகம் தோன்றியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலக போவதாக தில்ருக்ஷி விக்ரமசிங்க, பிரதமருக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.