வவுனியாவில் 50.5 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
நேற்றைய தினம் (1.11.2016) இரவு வேளை வவுனியா தாண்டிக்குளம் பொலிஸாரின் சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடமான கயஸ் ரக வானை வழிமறித்து சோதனையிட்டபோது பெருமளவில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ் சம்பவம் பற்றி மேலும் தெரிவித்த வவுனியா பொலிசார்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்துச் செல்லவிருந்த 51 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் வானின் சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் சந்தேகநபர்களை இன்று 02-11-2016 நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்த பொலிசார், கடந்த ஒரு மாத காலத்தில் இச்சோதனை சாவடியில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவை பெருமளவான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.