அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக்கொண்டே இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடாபில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட தயாரிப்பின் போது மக்களின் கருத்தக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
சமூகத்தின் அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவற்றை உள்ளடக்கி வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு 2500 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து தரப்பினருக்கும் நன்மைகளை அளிக்கக்கூடிய துரித அபிவிருத்தியுடன் கூடிய வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.