மக்கள் ஒன்றினைந்தால் மட்டுமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் சாத்தியமாகும், கடந்த 8 ஆண்டுகளாக உங்களின் ஜனாதிபதியாக இருந்ததில் நான் நம்புகிறேன். இது எனது நம்பிக்கை மட்டுமல்ல நமது அமெரிக்காவின் கொள்கையும் இது தான். ஆகவே, ஒன்றாகவே வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம் என அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா தனது பிரியாவிடை உரையில் தெரிவித்துள்ளார்.
சிகாகோவில் பிரியாவிடை உரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவிக்கையில், நீங்கள் என்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த அதிபராகவும் ஆக்கி விட்டீர்கள். நீங்கள் நாள்தோறும் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரமிது. கடந்த சில வாரங்களாக நானும் எனது மனைவியும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறோம்.
மெத்தனப்போக்குடன் கையாளப்படும்போது ஜனநாயகம் மிரட்டலுக்கு ஆளாகும். அனைத்துப் பின்னணிகளையும் சேர்ந்த அமெரிக்கர்கள் மற்றவரின் கண்ணோட்டத்திலிருந்து விவகாரங்களை ஆராய வேண்டும்.பிறரைக் கவனிக்கவும் செவிமடுக்கவும் வேண்டும்.பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.
மக்கள் ஒருங்கிணைத்தால் மட்டுமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் சாத்தியமாகும். 8 ஆண்டுகளாக உங்களின் ஜனாதிபதியாக இருந்ததில் இதனை நான் நம்புகிறேன். இது எனது நம்பிக்கை மட்டுமல்ல நமது அமெரிக்காவின் கொள்கையும் இது தான். ஒன்றாகவே வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம் என்றார்.
எனது நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நேரம் இது. அவர்களை என்றும் நான் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்த ஒபாமா, கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தனது உரையின் போது கண்ணீர் சிந்தியது பலரையும் கலங்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவி காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார்