Tuesday, July 4, 2017

How Lanka

அரசாங்க உயர் பதவிகளில் திடீர் மாற்றம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மூத்த மேலதிக சொலிசிற்றர் ஜெனரலும், அதிபர் சட்டவாளருமான, கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெற்றியாராச்சி தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளதையடுத்தே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியின் புதிய செயலாளராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்து வந்து பீ.பி.அபேகோன் கடந்த 30ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், ஒஸ்டின் பெர்ணான்டோ புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோட்டை தொகுதிக்கான பிரதம அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.