Saturday, July 22, 2017

How Lanka

இலங்கையிலேயே எனது மூன்று அத்தியாயங்களும்

எனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதலாவது போட்டியும் இலங்கையில் தான் , அதேபோல் முதல் கிரிக்கெட் போட்டிக்கான வர்ணனையும் இலங்கையில் தான் அந்தவகையில் எனது பயிற்றுவிப்பாளர் பதவியும் இலங்கையில் தான் முதன் முதலாக அமைந்துள்ளதென இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் கொழும்பு மூவன்பிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் 18 வயதில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து முதலாவது போட்டியை இலங்கை மண்ணிலேயே விளையாடினேன்.

அதேபோன்று கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக வந்தபோது அதுவும் 1994 ஆம் ஆண்டளவில் முதல் போட்டிக்கான வர்ணனையை இலங்கை மண்ணிலேயே ஆரம்பித்தேன்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக பொறுபேற்றதன் பின் இலங்கை மண்ணில் இடம்பெறவுள்ள போட்டியிலேயே எனது பயிற்றுவிப்பாளருக்கான பணியை நிறைவேற்றவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.