உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதால், வடகொரிய ஜனாதிபதிக்கு வேறு வேலையே இல்லையா என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே வடகொரியா தொடந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலகநாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரிய கேட்பது போல் இல்லை.
இந்நிலையில் வடகொரியா இன்று காலை உள்ளூர் நேரப்படி 09:40 மணி அளவில் சுமார் 578-மைல் பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஹ்வாசாங்-14 என்ற ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிபர் கிம் ஜான் உன் இந்த பரிசோதனையை நேரில் பார்வையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், வடகொரியா தற்போது மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை ஒன்றை செய்துள்ளது.
அந்த மனிதனுக்கு(வடகொரியா ஜனாதிபதி) வேறு எந்த வேலையும் இல்லையா? தென் கொரியாவும், ஜப்பானும் வடகொரியாவின் இந்த தொடர் சோதனையை பொறுத்துக் கொள்வது ஆச்சரியமாக உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வடகொரியாவின் இந்த செயலுக்கு சீனா கடுமையான நடவடிக்கை எடுத்து, வடகொரியாவின் தொடர் செயலுக்கு முடிவு கட்டுமா என்பதை பார்க்கலாம் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.