Friday, July 14, 2017

How Lanka

பேராதனை மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கண்டிக்கு விஜயம் செய்திருந்த வேளை தமக்கான பயிற்சிகளை வழங்கக் கோரி பேராதனை பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதுடன், தமது கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களையும் எழுப்பினர்.


பேராதனை பல்கலைக்கழகத்தில் மருத்துவ விஞ்ஞானபீடம் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் முடிவடைந்து போதும் இதுவரை தமக்கு பயிற்சி வழங்கக்கூடிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தே மாணவர்கள் பேராட்டங்களை மேற்கொண்டனர்.

சுகாதார அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமக்கான பயிற்சிகளை கண்டி, பேராதனை மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போதனா வைத்தியசாலைகளில் வழங்க வேண்டுமென்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதேவேளை நேற்று கண்டி போதானா வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கவனத்திற்கு மாணவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதனையடுத்து அமைச்சருக்கும் மருத்துவ முகாமைத்துவ பணிப்பாளர் சபைக்குமிடையில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது.

அதனையடுத்து உரிய பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.