Sunday, July 9, 2017

How Lanka

இதயம் மாற்றுச் சிகிச்சை இலங்கையில் முதன்முறையாக வெற்றி!!

இலங்கையில் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. 34 வயதுடைய பெண்ணுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்திய பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவரது இருதய நூற்றுக்கு 12 வீதம் செயலற்ற நிலையில் காணப்பட்டது. எனினும் மூளைச் சாவடைந்த 24 வயதுடைய இளைஞரின் இருதய அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன் குறித்த இளைஞனின் சிறுநீரகங்கள் இரண்டும் மேலும் இரண்டு நோயாளர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதயம் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணும் சிறுநீரகம் பொருத்தப்பட்ட இரண்டு நோயாளர்களும் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும், வைத்தியர்கள் தொடர்ந்து அவதானத்துடன் கண்காணித்து வருவதாக கண்டி வைத்தியசாலை வைத்திய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.