இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளரான சனத் ஜெயசூரியவும்
ஏனைய தேர்வாளர்களும், தங்களது பதவிகளிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா
கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளனரென, விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தேர்வாளர் குழுவில், சனத் ஜெயசூரிய தவிர, ரொமேஷ் களுவிதாரண, ரஞ்சித் மதுருசிங்க, எரிக் உபஷாந்த ஆகியோர் பதவி வகித்திருந்தனர்.
இலங்கை அணி, அண்மைக்காலத்தில் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்திவரும் நிலையில், அணி மீதும் தேர்வாளர்கள் மீதும் கிரிக்கெட் சபை மீதும், கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியிலேயே, சனத் தலைமையிலான தேர்வாளர் குழு, தமது இராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளது.
தனது பதவி விலகல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சனத், தனது பதவி விலகலுக்கான காரணங்களை, விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அளித்துள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.