மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகியுள்ளதுடன், மெக்சிகோ கடற்பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதனால், மெக்சிகோ கடற்பகுதிகளில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எவ்விதத் தகவலும் வௌியாகவில்லை.
மெக்சிக்கோவில் பாரிய நில அதிர்ப்பு ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தரவு தெரிவித்துள்ளது.
மெக்சிகோவின் தென்மேற்கில் 120 கிலோமீட்டர் தூரத்தில் பாரிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது 8.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு காரணமாக 8 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வின் மையப்பகுதி 33 கிலோ மீற்றர் (21 மைல்) ஆழத்தில் காணப்பட்டுள்ளதுடன், பிஜிஜியாபின் தென்மேற்கில் இருந்து 123 கிலோ மீற்றர் (76 மைல்) தொலைவில் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, Ecuador, Nicaragua, Panama, Guatemala, Honduras, Mexico, El Salvador, மற்றும் Costa Rica ஆகிய நாடுகளுக்கு ஆபத்தான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நில அதிர்வு ஏற்பட்ட பிறகு மெக்சிகோவில் உள்ள மக்கள் தெருக்களுக்கு ஓடி சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.