Wednesday, October 4, 2017

How Lanka

18 பில்லியனுக்கு தனியார் நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்குகிறது அமைச்சு


100 மெகாவோட் மின்சாரத்தை தனியார் பிரிவினரிடமிருந்து அவசரமாகக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான வானிலையினால் நீர்மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இந்த பின்புலத்தில் மின் வெட்டை அமுல்படுத்தாது மின்சாரத்தை விநியோகிக்க மேலதிகமாக 100 மெகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அறிவித்துள்ளார்.

தனியார் பிரிவினரிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆறு மாதங்களுக்கு இந்த அனுமதி கோரப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படின் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான அதிகாரத்தை சபைக்கு வழங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டுள்ளது.

100 மெகாவோட் மின்சாரத்தை தலா 6 மாதங்களுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொள்ள 18 பில்லியன் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.