சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிசுவில் லொரி ஒன்றில் கொண்டு வந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 230 பேர் பலியாகியுள்ளதுடன் அதிகளவானொர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் முக்கிய அமைச்சகங்கள் அமைந்துள்ள பரபரப்பு நிறைந்த சாலைகளை இலக்காக கொண்டு நேற்று இந்த தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.
எனினும் பெருமளவில் பொதுமக்களே பலியாகியுள்ளனர், காயமடைந்து மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் அப்துல்லாஹி முகமது 3 நாட்கள் இரங்கல் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு சோமாலியா மக்கள் முன்வந்து இரத்தம் வழங்க வேண்டும் என்றும் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 10 வருடங்களில் இதுபோன்ற தாக்குதல் எதனையும் நாங்கள் அறிந்ததில்லை என ஆமின் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய பேரிடர் என சோமாலியா அரசு அறிவித்துள்ளதுடன் இந்த சம்பவத்திற்கு அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் அமைப்பு நடத்தியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுவதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அந்த அமைப்பு இதுபற்றி எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.