யாழ். அரியாலைப் பகுதியில் இன்று பிற்பகல் இளைஞரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், இளைஞரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
மேலும், குறித்த இளைஞனின் மார்புப் பகுதியினை மூன்று குண்டுகள் துளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் எதற்காக நடத்தப்பட்டது என்பது தெரியவராத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.