நீதிமன்ற கட்டளையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட எட்டு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் டீ.வி.சானக மற்றும் மாகாண சபை உறுப்பினர் சம்பத் அதுகோரளவிற்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 40 பேரும் ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட அறிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்திய நீதவான், எட்டு பேருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.