Monday, October 16, 2017

How Lanka

புத்தளம் - குருநாகல் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு


புத்தளத்திற்கும் குருநாகலுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தெதுருஓயா பாலத்தின் புனரமைப்பு காரணமாக போக்குவரத்திற்கான தூரம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரணியை முன்வைத்து கடந்த சில நாட்களாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நிகவரெட்டிய பகுதியில் பாலம் புனரமைக்கப்படுவதால் பிரதான வீதியுடனான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக 19 கிலோமீற்றர்கள் மேலதிக பயணித்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளத்திற்கும் குருநாகலுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.