கொழும்பு முகத்துவாரம், அளுத்மாவத்தை வீதியூடான போக்குவரத்து இன்று இரவு முதல் மூன்று நாட்களுக்கு இரவு நேரங்களில் மட்டுப்படுத்தப்படவுள்ளது.
குழாய் நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகளுக்காக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, இன்று முதல் மூன்று நாட்களுக்கு இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரை அளுத்மாவத்தை வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் புறக்கோட்டையிலிருந்து மட்டக்குளி நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், ஹெட்டியாவத்தை சந்தியில் வலது பக்கமாக திரும்பி ஜோர்ஜ் ஆர் டி சில்வா வீதி, ப்ளூமெண்டல் வீதியூடாக சென்.ஜேம்ஸ் சந்திக்கு சென்று அளுத்மாவத்தைக்குள் பிரவேசிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்குளியிலிருந்து செல்லும் வாகனங்கள் மாதம்பிட்டி சந்தியூடாக சென். ஜேம்ஸ் சந்திக்கு திரும்பி, ப்ளூமெண்டல் வீதியூடாக சென்று ஜோர்ஜ் ஆர் டி சில்வா வீதியூடாக ஹெட்டியாவத்தை சந்திக்கு சென்று , புறக்கோட்டை செல்ல வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.