பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதியின் வருகை
வடமாகாணத்தில் முதல் தடவையாகத் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா பிரமாண்டமாக நடைபெற்றது
இது தொடர்பான நிகழ்வுகள் இன்று யாழ். இந்துக் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பெற்றது
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழாவைக் குறிக்கும் வகையிலான அலங்கார வளைவுகள் யாழ். நகரம் மற்றும் விழா இடம்பெறும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை அண்டிய பகுதிகளில் நாட்டப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பங்கேற்கவுள்ள குறித்த விழா தொடர்பான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் அதனை அண்டிய பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ். குடாநாட்டில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
விவசாய உற்பத்திகள் மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது தொடர்பான புத்தூர், நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை, அவர் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா இன்று யாழ். இந்துக் கல்லூரியல் பிரமாண்டமாக நடைபெபெற்றது
ஆர்பாட்ட காரர்களின் கோரிக்கையை செவிசாய்தார்
இந்த நிலையில் குறித்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிலையிலேயே அவர் நிலாவரையில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தான் சென்ற வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டகாரர்களின் கோஷத்தை செவிமடுத்த ஜனாதிபதி தான் சென்ற வாகனத்தை இடைவழியில் நிறுத்தி இறங்கியுள்ளார்.
பாதுகாவலர்களையும் மீறி தனது வாகனத்திலிருந்து இறங்கிய மைத்திரிபால சிறிசேன போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு உரத்து கோஷம் எழுப்பியுள்ளதுடன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளனர்.
அந்த கலந்துரையாடலின் போது,
அரசியல் கைதிகளின் விடுதலை செய்யுமாறும், வவுனியா நீதிமன்றில் வழக்குகளை நடாத்துமாறு உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாமென்றும் கோரிக்கை முன்வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி தான் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீதியின் இடையில் தனது வாகனத்திலிருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உரையாடிய சம்பவமானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.