Wednesday, October 4, 2017

How Lanka

முறிகள் மோசடியில் சிக்குவாரா ரவி


2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற முறிகள் ஏலத்தின் போது குறைந்த பெறுமதியில் விலைமனுவை முன்வைக்குமாறு அப்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இந்த விடயம் இன்று வெளிகொணரப்பட்டுள்ளது.


மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் அஷ்விந்த சில்வா ஆகியோர் இன்று ஆணைக்குழு முன்னிலையில் வழங்கிய சாட்சியத்தினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மூன்று அரச வங்கிகளின் ஏழு பிரதானிகள் ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கவுள்ளனர்.

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளர் ஆகியோர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளனர்.