ஆஷஸ் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 165 ஒட்டங்கள் எடுத்துள்ளது.
பிரிஸ்பேனில், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 196 ஒட்டங்கள் சேர்த்திருந்தது.
இன்று, இரண்டாம் நாள் ஆட்டத்தினைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 302 ஒட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியின் அதிகபட்சமாக வின்சி 83 ஒட்டங்களும், ஸ்டோன்மன் 53 ஒட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், நாதன் லயான் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி, 76 ஒட்டங்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 165 ஒட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித் 64 ஒட்டங்களுடனும், அவருக்கு பார்ட்னர்ஷிப்பாக, ஷான் மார்ஷ் 44 ஒட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மோயின் அலி மற்றும் ஜேக் பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.