Friday, November 17, 2017

How Lanka

யாழ் மாணவர்களின் மனநிலை எங்கு செல்கிறது - பணத்திற்காக தற்கொலை செய்த மாணவன்


யாழ்ப்பாணத்தில் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்தமையினால் மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனக்கு விருப்பமான படிப்பை தொடர 30 இலட்சம் ரூபா பணம் கேட்ட போதும், வீட்டில் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.

கொக்குவில் பகுதியை சேர்ந்த 19 வயதான சண்முகரத்தினம் டார்வின் என்ற மாணவனே இவ்வாறு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கொக்குவில் பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாணவனின் உயிரிழப்பால் கொக்குவில் பிரதேசம் சோகமயமானதுடன், அவரின் குடும்பத்தினர் அல்லோலப்படுவதாக தெரிய வருகிறது.