Friday, November 3, 2017

How Lanka

மழையினால் தேங்காயின் விலை மேலும் அதிகரிப்பு


சந்தையில் தேங்காயின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல இடங்களிலும் உள்ள கடைகளில் தேங்கை ஒன்று 90 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

தபுள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று மாலை தேங்காய் ஒன்றின் விலை 90 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஒரு தேங்காயை 65 ரூபாவிற்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

லொறிகளின் மூலமும் , சதோச உள்ளிட்ட இடங்களிலும் தேங்காயை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என தெங்கு செய்கை சபை தெரிவித்துள்ளது.

ஆனாலும் இதுவரையில் அவை சரியான முறையில் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.