Tuesday, November 7, 2017

How Lanka

இரணைமடு குளத்தின் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில்


இரணைமடு குளத்தின் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

34 அடியாகக் காணப்பட்ட குளத்தின் ஆழம் தற்போது 36 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு இரணைமடு குளத்தின் திட்ட வகுப்பு நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து அரசாங்கம் 164.04 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றது.


குளத்தின் அணைக்கட்டை இரண்டு அடிகளால் உயர்த்தி யாழ். குடாநாட்டிற்கு நீர் விநியோகிப்பதே இரணைமடு நீர் விநியோகத் திட்டத்தின் நோக்கமாகும்.

அதன் மூலம் இரணைமடு குளத்தின் தற்போதைய நீர் கொள்ளளவானது 106 ஆயிரம் ஏக்கர் கன அடி நீரை 120 ஆயிரம் ஏக்கர் கன அடி நீராக உயர்த்த முடியும் என்பது திட்ட வகுப்பாளர்களின் நோக்கமாகும்.


அதன்படி, இரணைமடு குளத்தின் ஆழம் 34 அடியில் இருந்து 36 அடியாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், தற்போது 16 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது.

அடுத்த பருவ மழைக்கு 36 அடி உயரத்திற்கு நீர் நிரம்பும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை, இரணைமடு குளத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த சில இராணுவ முகாம்களை அகற்றுவற்கு படையினர் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.