Thursday, November 23, 2017

How Lanka

மைத்திரி பார்த வேலை - மகிழ்ச்சியில் ராஜபக்ஷ குடும்பம்


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டருந்தார்.

நிலையில், கோத்தபாயவின் கைதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது பணத்தை தவறாக பயன்படுத்தி தனது பெற்றோருக்கு தனிப்பட்ட ரீதியிலான நினைவிடத்தை நிர்மாணித்தமை தொடர்பில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சட்டமா அதிபர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வழங்கிய உத்தரவை ராஜபக்ச ஆதரவாளர்கள் வெளியில் கசிய விட்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டம் ஒன்றில் இன்று அல்லது நாளை கோத்தபாய ராஜபக்ச கைதுசெய்யப்படலாம் எனக் கூறியிருந்தார்.

இதனை அறிந்துக்கொண்ட இத்தேபானே தம்மலங்கார தேரர் மற்றும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்கள் ஆகியோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, கோத்தபாயவை கைது செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட ஜனாதிபதி கோத்தபாயவை கைது செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ராஜபக்ஷ குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.