அவுஸ்திரேலியாவிலுள்ள மானுஸ் தீவிலுள்ள அகதிகளை வலுக்கட்டமாயமாக வெளியேற்றப் போவதாக கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களை தடுத்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பப்புவா நியுகினியின் மானுஸ்தீவு தடுப்பு தற்போது கைவிடப்பட்டுள்ளது.
எனினும் அங்குள்ள 600ற்கும் மேற்பட்ட அகதிகள் அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர் அவர்களிற்கான அத்தியாவசிய தேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த அகதிகள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவோம் என அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முகாமில் உள்ளவர்கள் இன்னமும் அவுஸ்திரேலிய குடிவரவு துறையினர் மற்றும் பப்புவா நியுகினியின் குடிவரவு துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.
குறித்த அகதிகள் தொடர்பில் உயர் அதிகாரிகள் உத்தரவு வழங்கும் வரை நடவடிக்கைகள் எதனையும் எடுக்க மாட்டோம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்
இதேவேளை மானஸ்தீவு தடுப்பு முகாமிலிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்நோக்கும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கான புதிய தங்குமிடம் இன்னமும் தயாராகவில்லை என ஐ.நா நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் மற்றும் ஏனைய வசதிகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் 600ற்கும் மேற்பட்ட அகதிகள் முகாமில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
அகதிகளிற்காக தயாராகிவரும் மூன்று இடங்களை பார்வையிட்டதாக தெரிவித்துள்ள ஐநா அதிகாரிகள் இந்த இடங்கள் இன்னமும் தயாராகவில்லை என குறிப்பிட்டுள்ளார்