சர்வதேச ஒருநாள் அரங்கில் மூன்று இரட்டைச் சதங்களை விளாசிய ஒரே வீரராக இந்தியாவின் ரோஹித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் தனது மூன்றாவது இரட்டை சதத்தை எட்டினார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா ஆரம்பம் முதலே அபாரமாக ஓட்டங்களைக் குவித்தது.
ஷிகர் தவான் 68 ஓட்டங்களையும் ஸ்ரேயாஷ் ஐயர் 88 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 208 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார்.
153 பந்துகளை எதிர்கொண்ட அவர் 12 சிக்ஸர்கள், 13 பௌண்டரிகளை விளாசினார்.
இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா பெற்ற இரண்டாவது இரட்டைச் சதமாகும்.
இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ஓட்டங்களைக் குவித்தது.
தனி ஆளாக போராடிய மத்தியூஸ்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 141 ஓட்டங்களால் தோல்வியடைந்தது .
ரோஹித்தின் அதிரடியைப் பார்த்து பார்வையாளர் ஆனேன்: ஷ்ரேயஸ் ஐயர்
மெகாலியில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மாவின் இரட்டை சதம் அடித்தார்.
இந்நிலையில், 88 ஒட்டங்கள் குவித்த ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித்தின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி, மெஹாலியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 392 ஒட்டங்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 208 ஒட்டங்கள் குவித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 88 ஒட்டங்கள் குவித்தார்.
இந்நிலையில், ரோஹித்துடன் இணைந்து 223 ஒட்டங்களை குவித்த ஷ்ரேயஸ் ஐயர் கூறுகையில்,
‘ரோஹித் சர்மாவின் ஆட்டத்தினைக் கண்டு நான் ஒரு பார்வையாளரானேன். அவர், தனது சதத்தை 115 பந்துகளில் எடுத்தார். அதன் பிறகு அவர் ருத்ரதாண்டவம் ஆடினார்.
நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது இருந்த தன்னம்பிக்கையுடன் களத்திற்கு சென்றேன். கொஞ்சம் குளிராக இருந்தாலும், துடுப்பாட்டத்திற்கு உகந்த மைதானம் என்பதால், மிகப்பெரிய ஒட்டங்களை குவித்தோம்.
நானும் ரோஹித்தும் சர்மாவும் 40வது ஒவர் வரை அணியை கொண்டு செல்ல திட்டமிட்டோம். எங்களில் யாரவது ஒருவர், களத்தில் நீண்ட நேரம் நின்றால் புதிதாக இறங்குபவர்களுக்கு அது மிகப்பெரிய உத்வேகமாக அமையும் என்பதே எங்களின் திட்டம்.
ரோஹித் சர்மாவின் ஆட்டத்தினை கொஞ்சமாக தான் பார்த்தேன். எனினும், அவரின் ஆட்டம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.