இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 30,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான விண்ணங்கள் அடங்கிய கையேட்டினை அடுத்த வார இறுதியில் வௌியிடவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கையேடு வௌியானதன் பின்னர் ஒரு மாதத்திற்குள், இணையத்தளம் ஊடாக மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்குமாறு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வௌியாகின.
இம்முறை உயர்தரப் பரீட்சையில் 253,483 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன், அவர்களில் 163,104 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.