Saturday, December 30, 2017

How Lanka

இங்கிலாந்தின் வெற்றி வேட்கையை தடுத்தார் ஸ்டீவன் ஸ்மித் - சமனிலையில் முடிந்தது 4வது போட்டி


அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

மெல்பர்ன் மைதானத்தில் பொக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 327 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அலிஸ்டயர் குக்கின் அபார இரட்டைச்சதத்தின் மூலம் 491 ஓட்டங்களை குவித்தது.

164 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்களுடன் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

40 ஓட்டங்களுடன் களமிறங்கிய டேவிட் வோனர் டெஸ்ட் அரங்கில் 26 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தனது 23 ஆவது டெஸ்ட் சதத்தை எட்டினார்.

அவுஸ்திரேலியா 76 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களை பெற்றிருந்த போது இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அலிஸ்டயர் குக் தெரிவானார்.

05 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் 01 போட்டி எஞ்சிய நிலையில் அவுஸ்திரேலியா தொடரை 03 க்கு பூச்சியம் என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து துடுப்பாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 491 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அலேஸ்டர் குக் ஆட்டமிழக்காது 244 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இந்தநிலையில், அவுஸ்திரேலியா அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வந்தநிலையில், இன்றைய 5 வதும் இறுதியுமான நாள் நிறைவில், 4 விக்கட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்ற பெற்ற நிலையில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதி மற்றும் 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜனவரி 4ந்தேதி சிட்னி நகரில் நடைபெற உள்ளது.