நாட்டிலிருந்து போதைப்பொருட்களை இல்லாதொழிக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கூட்டு வன்முறைகளைத் தடுக்கும் பிரிவினர் ஒன்றிணைந்து சூட்சுமமான முறையில் மேற்கொண்ட செயற்பாடுகளின் பிரகாரம் பலகோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்காக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாளக் குழுக்களும் போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகளும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தன.
பாதாளக் கோஷ்டியினராலேயே போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் மறைந்திருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் அனுப்பி வைக்கும் பாதாளக் கோஷ்டிகளின் தலைவர்களைத் தேடி வலைவீசும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பலனாக நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாகத் துடைத்தெறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.