500 வருடங்கள் பழமைவாய்ந்த யாழ். ஊர்காவற்துறை கோட்டையைப் பாதுகாப்பதற்கு தொல்பொருளியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் நிமித்தம் விசேட குழுவொன்று ஊர்காவற்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது.
ஊர்காவற்துறை கோட்டை 1505 இல் போர்த்துகீசியரால் கட்டப்பட்டது.
இதன் பின்னர் 1796 ஆம் ஆண்டு அதனை மேலும் விஸ்திரப்படுத்தி ஒல்லாந்தரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கைதிகளைத் தடுத்து வைப்பதற்காக ஒல்லாந்தரால் இந்த கோட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கோட்டை மீதான தாக்குதலின் பின்னர் தற்போது பாரிய மரங்கள் வளர்ந்து காணப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் குறிப்பிட்டது.
இந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.