நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.
ஆரம்பத்தில் உப்புல் தரங்கவின் அதிரடியான ஆட்டத்தில் பந்து வீச்சுக்கான சராசரி ஓட்ட எண்ணிக்கையை 6.8 மேல் பெற்றது. ஆயினும் தரங்க 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்த போது 201 - 4 விக்கெட்கள் என இருந்த இலங்கை அணி 215 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வெறும் 14 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்களையும் இழந்து தமது மோசமான பின்வரிசை துடுப்பாட்ட வரிசையை காட்டினர்.
இந்திய பந்து வீச்சில் குலதீப் யாதவ் சாகல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்தினர்.
பதிலக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் ரோகித் சர்மாவை இழந்த போதும் தவானின் அதிரடி சதம் மூலம் 32 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அத்துடன் தொடரையும் 2 - 1 என கைப்பற்றியது. இத்தொடரில் 62 ஓட்டங் பெற்ற தவான் 4000 ஓட்டங்களை குறைந்த இனிங்க்ஸ் இல் அடித்த 2வது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார். முதலிடத்தில் கோலி உள்ளார்.
இங்கை அணியில் உப்புல் தரங்கவை தவிர ஏனைய வீரர்களுக்கு துடுப்பெடுத்தாட தெரியாது என இலங்கை அணியின் முன்னனி வீரர்களும் இலங்கை அணி ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.