ரயில் சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்காக ஓய்வு பெற்ற ஊழியர்களை சேவையில் இணைந்து கொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
ஓய்வு பெற்ற ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் மற்றும் பாதுகாவலர்கள் மீண்டும் சேவையில் இணைந்து கொள்ள விரும்பினால் ரயில்வே தலைமையகத்தின் மேலதிக பொது முகாமையாளரை தொடர்புகொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இலங்கை ரயில்வே திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், ரயில் சாரதிகள், ரயில் பாதுகாவலர்கள் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என ரயில்வே பொது முகாமையாளர் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினத்திற்குள் சேவைக்கு சமூகமளிக்காதவர்கள், சேவையிலிருந்து விலகிச் சென்றவர்களாக கருதப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஒன்று இன்றைய தினம் நடைபெறுகின்றது.
பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ரயில்வே தொழிற்சங்கங்களினால் இன்று 4 ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் தூர பிரதேசங்களுக்கு பயணிக்கும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்