Thursday, December 28, 2017

How Lanka

உயர்தர பரீட்சை மீளாய்விற்கு விண்ணப்பிக்க கோரிக்கை

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுப்பேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் தமது அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் இரண்டு இலட்சத்து 53 ஆயிரத்து 483 பரீட்சார்த்திகள் தோற்றினர்.

அவர்களில் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை பரீட்சைக்கு தோற்றியவர்களில் 205 பேரின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுப்பேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.