Monday, January 1, 2018

How Lanka

அரசு வேடிக்கை பார்க்கின்றது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிப்பு

எங்கள் உறவுகளை காணாமல் ஆக்கிவிட்டு எங்களை வீதியில் இருந்து துன்பங்களை அனுபவிக்க வைத்து விட்டு இந்த அரசு வேடிக்கை பார்க்கின்றது என 316 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் தெரிவிக்கையில்,

இறுதி யுத்தத்தின் பின்னரும், அதற்கு முன்னைய காலப்பகுதிகளில் கைது செய்யப்பட்டும், படையினரிடம் சரணடைந்தும் உள்ள தங்களது உறவுகள் தொடர்பில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பதில்களும் இன்றி தங்கள் உறவுகளை மீட்டுத் தரக்கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 316 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது,

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தங்களுக்கு பல்வேறு தரப்புக்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்ற போதும், யாரும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக இல்லை.

எங்களுடன் வீதியிலே தங்கள் உறவுகளுக்காக போராடி பலர் நோய் வாய்ப்பட்டு இறந்திருப்பதுடன் இன்றும் பலர் நோய் வாய்ப்பட்டு இருக்கின்றார்கள்.

இந்த புத்தாண்டிலே படையினர் உட்பட பலரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்கள்.

ஆனால், நாங்கள் வீதியிலிருந்து கண்ணீர் வடிக்கின்றோம். நல்லாட்சி அரசை நாங்கள் நம்பி இருந்தோம், பத்து மாதங்களுக்கு மேலாக அரசாங்கம் சாதகமான பதில் எதையும் தரவில்லை என்று கவலையுடன் தெரிவித்தனர்.

நாங்களும் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றோம். இதேபோல முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் ஏனைய இடங்களிலும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள், எங்களது போராட்டத்திற்கு அரசு நல்ல தீர்வைத் தரவேண்டும் மேலும் தெரிவித்தனர்.