Thursday, January 18, 2018

How Lanka

வூசோ குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு வடக்கு தமிழர்கள்

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட வூசோ குத்துச்சண்டை சுற்றுப்போட்டியில் வடமாகாணத்தின் வூசோ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் செல்வரத்தினம் நந்தகுமார் தலைமையில் இரண்டு பெண் வீராங்கனைகள் உட்பட ஏழு வீரர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

'கண் போய்ஸ்' விளையாட்டுக்கழகத்தின் குத்துச்சண்டை வீரர்களுக்கான தங்கசாமி தர்சிகா 23 வயதுக்குட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தையும்,

தியாகராசா நாகராஜா 19 வயதுக்குட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும்,

புருசோத்தமன் சியாமினி 19 வயதுகுட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில்வெண்கலப் பதக்கத்தையும்,

குகனேந்திரன் கபிசன் 19 வயதுக்குட்பட்ட 70 கிலோஎடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும்,

மகேந்திரராசா பிரவீன் 23 வயதுக்குட்பட்ட70 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர்.

தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்ற வீரர்கள் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் ஆசிய நாடுகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.