முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் இரகசிய தொடர்புகள் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொது மேடைகளில் விமர்சனம் செய்து வருகின்றார்.
ஆனால், ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது சபையிலிருந்த வெளியேறினார்.
தொடர்ந்து ரவி கருணாநாயக்கவை, தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்த, உங்களுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என கூறியதுடன், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இதனை தான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி, பிணை முறி மோசடி குற்றவாளிகளை தண்டிக்க பிரதமரிடம் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
அந்த வகையில் பிணை முறி மோசடி குற்றவாளிகளை தண்டிக்க தமக்கு சக்தியாக இருக்குமாறும், சிறையில் அடைக்கவேண்டியவர்களை சிறையில் அடையுங்கள்.
அதற்கு பின்னிற்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.