Tuesday, January 9, 2018

How Lanka

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சரின் கீழ் விசேட பொலிஸ் படையணி


யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட மாகாணசபையின் 115ஆவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்த அமர்வில் மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரும் விசேட விடயம் ஒன்றை சபைக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்த நிலையில், அனைத்து வட மாகாணசபை உறுப்பினர்களும் மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைப் பொருள் பாவனை அதிகரித்திருப்பதாக அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.