Sunday, January 14, 2018

How Lanka

மதுபான வர்தமானி விடயம் ரணில் - மைத்திரி மோதல்

மதுபானங்கள் தொடர்பாக கடந்த வாரங்களில் வெளியிடப்பட்ட அனைத்து வர்த்தமானிகளையும் இரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இன்று அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரதமர் றணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை மதுகானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு இருந்தது.

குறிப்பாக பெண்கள் மதுபான விற்பனை நிலையங்களில் பணிபுரிய, கொள்வனவு செய்ய இருந்த தடைகள் நீக்கப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்திருந்தது.

அந்த அறிவிப்பிற்கு பௌத்த கடும்போக்களார்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வெளிவந்திருந்தன.

தவிரவும் மதுபானங்கள் குறித்து அண்மையில் அமைச்சரவை வெளியிட்ட தீர்மானங்கள் குறித்து சிறீலங்கா சுதந்திரக்ட்சி விசேட அறிவித்தலை வெளியிடும் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்திருப்பது அமைச்சரவையுடனான இணக்கப்பட்டிலா?

தனித்து கட்சி சார்பில் எடுக்கப்பட்ட முடிவா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.