Monday, February 5, 2018

How Lanka

ஒரே நாளில் 1000 பக்கங்களுக்கு வாக்குமூலம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் 1000 பக்கங்களுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்காம் திகதி காலை கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமும் அன்று மாலை 8 மணி வரையில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த இருவரிடமும் இருந்தும் 1000 பக்கங்களுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இருவரிடமும் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் குற்ற புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் வீடுகள் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.