புதிய தேர்தல் முறையை அமுல்படுத்தி அமைதியான தேர்தல் நடந்துவருவதை எண்ணி தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று பொலன்னறுவை வித்யாசார விரிவெனவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்ததன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது பேசிய அவர், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரே நாளில் தேர்தல் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தொகுவாரி தேர்தல் முறை நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டிருக்கிறது. இம்முறை விகிதாசார கலப்பு முறை தேர்தல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன் மூலமாக வன்முறைகள் குறைக்கப்பட்டு மிக அமைதியான முறையில் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
எந்தவிதமான தலையீடுகளும் இன்று மிக அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்கள் அமைதியாக வாக்களித்துவருகின்றார்கள். தேர்தலுக்குப் பின்னர் எமது அபிவிருத்திப் பணி தொடங்கும். மக்கள் பெருவாரியாக வாக்களித்துவருகின்றார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கான வெற்றி வாய்ப்புக்கள் அதிகளவில் இருக்கின்றன என்றார்.
இலங்கை ஜனாதிபதிகளின் வரலாற்றில் மைத்திரிபால சிறிசேன புதியதொரு எடுத்துக்காட்டை நிகழ்த்தியிருக்கிறார்.
இதுவரை ஜனாதிபதிகளாக இருந்தவர்கள், தேர்தல் காலங்களின் போது, பெரும் எடுப்பிலான பாதுகாப்புப் படைகள் சகிதம் வாக்களிக்க வருவார்கள். ஆனால்,மைத்திரிபால சிறிசேன மக்களோடு மக்களாக சென்று வாக்களித்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மைத்திரிபால சிறிசேன எளிமையாக சென்று வாக்களித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகின்றன.