கியூபப் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபாவின் தலைநகரான ஹவானாவில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
68 வயதான அவர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான இவர், “ஃபிடலிட்டோ” என்று பரவலாக அறியப்பட்டார்.
ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார்.
பல மாதங்களாக காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட்கு ஆழ்ந்த மன அழுத்தத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட் அவரது தந்தையின் முதல் மனைவியான மிர்தா டயஸ்-பாலார்ட்டுக்குப் பிறந்தவர்.