Saturday, February 10, 2018

How Lanka

கிளாசென் மற்றும் பெகலூக்வாயோ அதிரடி தென்னாபிரிக்கா முதல் வெற்றி

ஜோகன்னஸ்பர்க் 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.


ரோகித் சர்மா 5 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணித்தலைவர் விராட் கோஹ்லி களமிறங்கினார். அவர் தவானுடன் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். தவான், கோஹ்லி இருவரும் அரைசதம் கடந்தனர்.

இடையில் மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கோஹ்லி ஆட்டமிழந்தார்.

அவர் 83 பந்துகளில் 75 ஓட்டங்கள் (7 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்தார், கோஹ்லி, தவான் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் சேர்த்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தவான் சதம் அடித்தார். 100 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 13 சதங்கள் அடித்துள்ளார்.

பின்னர் ரகானே களமிறங்கினார். சதமடித்த தவான் 109 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவர் 11 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடித்திருந்தார்.

அவரைத்தொடர்ந்து ரகானேவும் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் டோனியுடன், ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்தவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்க தவறினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்கள் எடுத்தது. டோனி 42 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் ரபாடா, நிகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களும், மோர்னே மார்கல், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

290 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கத்திலேயே சரவெடியாக வெடித்தது.

மார்க்ராம், ஆம்லா ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. பும்ரா பந்தில் மார்க்ராம்(22) வெளியேறினார். தொடர்ந்து குல்தீப் பந்தில் ஆம்லா(33) வெளியேறினார்.