தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 64 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 2வது டி20 போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியனில் நேற்று நடந்தது.
இதில், இந்திய அணி நிர்ணயித்த 189 ஓட்டங்கள் இலக்கை, தென் ஆப்பிரிக்க அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து இலக்கை அடைந்தது.
ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்து வீசிய சாஹல், நேற்றைய போட்டியில் சொதப்பினார். அதாவது, 4 ஓவர்கள் வீசிய சாஹல் 64 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.
ஒரு ஓவருக்கு சராசரியாக 16 ஓட்டங்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதில் 2 பவுண்டரி, 7 சிக்சர்கள், ஒரு அகலப்பந்து அடங்கும். அவர், நான்கு பந்துகளில் மட்டுமே, ஓட்டங்கள் விட்டுக் கொடுக்கவில்லை.
இதன் மூலம், அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்த, இந்திய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்பு, ஜோகிந்தர் சர்மா 4 ஓவர்களில் 57 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.