ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இக் கைப்பேசியில் Face ID தொழில்நுட்பமும் தரப்பட்டிருந்தமையால் சிறந்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.
இவ்வாறான நிலையில் அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 8 மில்லியன் iPhone X கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வருட கிறிஸ்துமஸ் காலப் பகுதியில் மொத்தமாக 22.39 மில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
எனினும் iPhone 8 மற்றும் iPhone 8 Plus ஆகிய இரு கைப்பேசிகளின் விற்பனையானது iPhone X கைப்பேசியின் விற்பனையிலும் அரைப் பங்காகவே கணப்பட்டுள்ளது.
மேலும் இவ் அதிகரித்த ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையானது ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்தும் கைப்பேசி சந்தையினை ஆக்கிரமித்து வருகின்றமையை எடுத்துக்காட்டுவதாக ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.