Tuesday, March 13, 2018

How Lanka

ரஹீம் ஆக்ரோசமாக நாகினி ஆட்டம் - கடுப்படைந்த திசரா பெரேரா

இலங்கை அணியின் பயிற்சியாளரை மனதில் வைத்தே முஸ்தபிகுர் ரஹீம் நாகினி ஆட்டம் போட்டதாக கூறப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில், இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதிய ஆட்டத்தில் வஙகதேச அணி, இலங்கை அணி நிர்ணயித்த 215 ஓட்டங்களை அசால்ட்டாக எட்டி பிடித்து சாதனை படைத்தது.

இப்போட்டியில் வங்கதேச வீரர் முஸ்தபிகுர் ரஹீம் 35 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் அணியின் வெற்றிக்கான ஓட்டத்தை பெற்ற பின்பு ஆக்ரோசமாக கத்தியதுடன், நாகினி ஆட்டம் ஒன்று போட்டார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.


இந்நிலையில் வங்கதேச ஊடகங்கள் ஏன் ரஹீம் அப்படி செய்தார் என்பது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சில மாதங்களுக்கு முன்பு வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.

அப்போது வங்கதேச அணிக்கு பயிற்சியாளராக இருந்த சண்டிகா ஹத்ரூசிங்காவுக்கும், ரஹீம்முக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. ரஹீம்மின் தலைவர் பதவி குறித்தும் அவர் கருத்துக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை மனதில் வைத்துக் கொண்ட, அவர் நாகினி ஆட்டம் போட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. சண்டிகா ஹத்ரூசிங்கா தற்போது இலங்கை அணிக்கு பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.